என் மலர்
செய்திகள்

முககவசம்
முக்கண்ணாமலைப்பட்டியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாத வாகன ஓட்டிகள், வியாபாரிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் சுகாதார துணை இயக்குனரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் சேதுராமன் தலைமையில், செங்குளம் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுக்க கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிகளில் ஈடுபடுவோர் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முககவசம் அணியாத வாகன ஓட்டிகள், வியாபாரிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






