என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்- ஒருவர் கைது

    குடியாத்தம் அருகே மணல் கடத்திய மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த நாகல் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஒலக்காசி பாலாற்றில் இருந்து மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தி வந்த ராமாலை காந்தி கணவாய் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×