search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பவானியில் சிறுமியை திருமணம் செய்த 2 வாலிபர்கள் உள்பட 6 பேர் போக்சோவில் கைது

    ஈரோடு மாவட்டம் பவானியில் சிறுமியை திருமணம் செய்த 2 வாலிபர்கள் உள்பட 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    பவானி:

    ஈரோடு மாவட்டம், பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு காலை ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சேலம் மாவட்டம், காவேரிப்பட்டி அக்ரஹாரம் பன்னிமடை குடியை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் அஜித் (21) என்பதும், திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையாமல் இருப்பது தெரியவந்தது.

    மேலும் அந்த சிறுமியின் பெற்றோர், பவானி அடுத்த காடப்பநல்லூர் கோவில் பாளையத்தை சேர்ந்த அப்புசாமி (48). இவரது மனைவி நாகமணி (34) ஆகியோரை அழைத்து விசாரித்ததில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 12-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இந்த சிறுமியை கட்டாயப்படுத்தி சேலம் மாவட்டம், காவேரிபுரம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த குப்புசாமி (60). இவரது மனைவி கோவிந்தம்மாள் (55) ஆகியோரின் மகனான காமராஜுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்த இவர்கள் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கோவில் பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமான அஜித், ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, சங்ககிரி அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கண்டு பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளார். இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

    அதன்படி பவானி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து வைத்த பெற்றோர், கட்டாய திருமணம் செய்த காமராஜ் மற்றும் அவரது பெற்றோர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த அஜீத் உள்பட 6 பேரை போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×