search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஈரோடு மாவட்டத்தில் விடிய, விடிய சாரல் மழை

    சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அங்கு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் நேற்று 3-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    இதேப்போல் அம்மாபேட்டை, கோபி, மொடக்குறிச்சி, பவானி, பவானி சாகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. மாநகர் பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. பின்னர் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்தது. பின்னர் இரவு முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சென்னிமலையில் மாலை 5 மணிக்கு மேல் லேசாக பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்தது. இரவு 7 மணி வரை மழை நீடித்தது. சென்னிமலை சுற்று வட்டார கிராமங்களிலும் மழை பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், விவசாய நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.

    சென்னிமலை டவுனில் பெய்த மழையால் மேலப்பாளையம், குமராபுரி, காட்டூர், அம்மாபாளையம், பிடாரியூர், ஈங்கூர் ரோடு, ஊத்துக்குளி ரோடு, காங்கயம் ரோடு, அரச்சலூர் ரோடு, வெள்ளோடு ரோடு உட்பட அனைத்து பகுதிகளிலும் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் குளிர் காற்று வீசியது. இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-15, சென்னிமலை-8.6, தாளவாடி-8, வரட்டுபள்ளம்-6.4, அம்மாபேட்டை-5.2, குண்டேரிபள்ளம்-5, சத்தியமங்கலம்-4, கோபி-3.2, மொடக்குறிச்சி-3, பவானிசாகர்-1.8, பவானி-1.8.
    Next Story
    ×