என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கிணத்துக்கடவு அருகே கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

கோவை:
கோவை கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 23). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (25).
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபு மற்றும் சிவகுமாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அபபோது அங்கு இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிவகுமார், பிரபு மீது கடுமையான கோபத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று பிரபு சென்றாம்பாளையம் அருகே நடந்து வந்தார். அப்போது அங்கு இருந்த சிவகுமார் திடீரென அவரை வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிவகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுவை குத்தி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். பலத்த காயமடைந்த பிரபு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்ந்தார்.
பின்னர் இதுகுறித்து பிரபு கிணத்துக்கடவு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.