என் மலர்
செய்திகள்

முக ஸ்டாலின்
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தி அமைத்து முதலமைச்சர் உத்தரவு
திருத்தியமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்படுவார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தி அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி திருத்தியமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்படுவார். உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவராக பேராசிரியர் அ.ராமசாமியும், உறுப்பினர் செயலராக பேராசிரியர் கிருஷ்ணசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பணிவழி உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மாண்புமிகு ஆளுநரின் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்
Next Story






