search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    நெல்லை அருகே ஓடஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை

    நெல்லை அருகே ஓடஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முக்கூடல்:

    நெல்லையை அடுத்த முக்கூடல் அருகே உள்ள மேலபாப்பாகுடியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 65). தொழிலாளி. இன்று அதிகாலை நாராயணன் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு பீடி குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாள், கத்தி, கம்புகளுடன் 6 பேர் கும்பல் திரண்டு வந்தனர்.

    அவர்கள் திடீரென்று நாராயணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். நாராயணன் தப்பி வீட்டுக்குள் ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை வழி மறித்து மீண்டும் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே நாராயணன் பலியானார்.

    அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடி விட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் போலீசார்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கொலை செய்யப்பட்ட நாராயணன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    மேலபாப்பாக்குடியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராசுக்குட்டி என்ப வருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் ராசுக்குட்டிக்கு ஆதரவாக புதுக்கிராமம் பகுதியை சேர்ந்த 6 பேர் சேர்ந்து கணேசனிடம் தகராறு செய்தனர். அப்போது கணேசனுக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த பலர் திரண்டு வந்து எதிர்தரப்பை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் 2 தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த மோதலின் எதிரொலியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாராயணனை கொலை செய்த 6 பேரை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×