search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    பெட்ரோல்- டீசல் மீதான வரியை குறைக்க முடியாது: சட்டசபையில் நிதி அமைச்சர் அறிவிப்பு

    ஒரு வருடம் கூட செஸ் வரியை கூறப்பட்ட திட்டத்திற்காக முழுமையாக ஒன்றிய அரசு பயன்படுத்தவில்லை என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.) பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பெட்ரோல்- டீசல் விலையை குறைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

    ஏப்ரல் 2011-ல் ரூ.9.48 பைசாவாக இருந்த பெட்ரோல் வரி, 2014-ல் ரூ.21.48 ஆக உயர்த்தப்பட்டது.

    இதில் 4 ரூபாயை மட்டும் மாநிலத்துக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள பைசாவை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டது.

    கோப்புப்படம்

    ஒரு லிட்டர் பெட்ரோலில் கிடைக்கும் வரியில் 5 மடங்கை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. தற்போது அது 31 ரூபாய் வரை சென்றுள்ளது.

    செஸ் வரி என்பதே தவறான கொள்கை. இதுவரை ஒரு வருடம் கூட செஸ் வரியை கூறப்பட்ட திட்டத்திற்காக முழுமையாக ஒன்றிய அரசு பயன்படுத்தவில்லை. பல மாநிலங்கள் நம்மை விட அதிகமாக வரி விதிக்கிறது. தற்போதுள்ள நிதிநிலையில் இப்போதைக்கு பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியாது. நிதிநிலை எதிர்பார்த்ததை விட மிக மோசமாக உள்ளது. நிதி நிலை சீரான பின் நிச்சயமாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

    Next Story
    ×