என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  கோவையில் 950-க்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் தினந்தோறும் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

  கோவை:

  கொரோனா தொற்றின் 2-வது அலையால் கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. அதுவும் மே மாதத்தில் கட்டுக்கடங்காமல் ஒரு நாள் பாதிப்பு 4,500-க்கும் என்ற எண்ணிக்கையில் சென்றதால் மக்கள் பீதியடைந்தனர்.

  இதையடுத்து மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்தது.

  இதன் விளைவாக மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக ஜூன் 2-வது வாரத்தில் இருந்து பாதிப்பு 1,500, 1,200, 1,100, 1089, 1,004 என்ற எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது.

  இந்த நிலையில் கோவையில் 55 நாட்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு 950-க்கும் கீழ் சென்றுள்ளது. நேற்று மாவட்டத்தில் புதிதாக 904 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகி உள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 493 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 803 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஆஸ்பத்திரிகளில் 10 ஆயிரத்து 802 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  கோவையில் தினந்தோறும் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தினமும் 200 பேர் கொரோனா பாதிப்புடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த வண்ணம் இருந்ததால் அனைத்து படுக்கைகளும் நிரம்பி காணப்பட்டது.

  ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 60 பேர் மட்டுமே சிகிச்சைக்கு வருகின்றனர். இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் உள்ள 60 சதவீதம் படுக்கைகள் காலியாக உள்ளது. தவிர அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள அனைத்து படுக்கைகளும் காலியாக உள்ளது. நேற்றைய நிலவரப்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் 584 பேர் சிகிச்சையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Next Story
  ×