search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    நெமிலி அருகே மதுகுடித்தபோது தனியார் நிறுவன ஊழியர் கொலை- போலீசார் விசாரணை

    ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யாதது உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 208 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நெமிலி:

    நெமிலி அருகே நண்பர்களுடன் மது குடித்தபோது தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெமிலி அடுத்த பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் கவுதம் (வயது 28). சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று நண்பர்களுடன் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள விவசாய நிலத்தில் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கவுதம் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சம்பவ இடத்தில் ஒரு பீர் பாட்டில் கிடந்தது. கொலைசெய்யப்பட்ட கவுதமின் இடுப்பு பகுதியில் இரண்டு குவாட்டர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் ஆகியோரும் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர்கள் நெமிலி லட்சுமிபதி, அரக்கோணம் ஜெயபிரகாஷ், காவேரிபாக்கம் மகாலட்சுமி, அரக்கோணம் மதுவிலக்கு பிரிவு பாரதி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×