search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

    கோட்டைப்பட்டினம் அருகே டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஆர்ப்பாட்டம்

    கொரோனா பரவல் காரணமாக மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. வருகிற 30-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாக மீனவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-

    மத்திய அரசின் தொடர் டீசல் விலை உயர்வு மீனவர்களை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. தற்போதைய நிலையில் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பது மீனவர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

    அவ்வாறு பிடித்து வரும் மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. இதனால் அதிக விலை கொடுத்து டீசலை வாங்கி கடலுக்குள் மீன்பிடிக்க செல்வது மிகவும் சாத்தியமற்றது. எனவே மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும். மாநில அரசுகள் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசலை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×