search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு வரும் சிறுவர் மன்றத்தை படத்தில் காணலாம்.
    X
    ஊட்டியில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு வரும் சிறுவர் மன்றத்தை படத்தில் காணலாம்.

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள்

    கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா முதல் அலையின் போது, தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 2-வது அலை வேகமாக பரவியதால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அறிகுறி தென்பட்டும் தாமதமாக வந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதற்கிடையே கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் முன்னேற்பாடாக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்னேற்பாடாக குழந்தைகளுக்கு சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.

    மேலும் மருத்துவமனை முன்பு உள்ள சிறுவர் மன்றத்தை குழந்தைகளுக்கான சிறப்பு வார்டாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு 50-க்கும் மேல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படுவதால், அதற்கான குழாய்கள், மின் இணைப்புகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் உடல்நிலை சீராக உள்ளதா என்று கண்காணிக்க இ.சி.ஜி. எந்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த எந்திரங்களும் பொருத்தப்பட உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் படுக்கைகள் போடப்படுகிறது.

    இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறியதாவது:-

    ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 25 படுக்கை வசதிகளுடன் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு திறக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக சிறுவர் மன்றத்தில் குழந்தைகளுக்கான வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த 2 வார்டுகளும் சுத்தம் செய்யப்பட்டு படுக்கைகள், ஆக்சிஜன், இ.சி.ஜி. எந்திரங்கள் போன்ற அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×