search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிய மோடியின் பொருளாதார கொள்கை: ப.சிதம்பரம்

    காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தப்பட்டனர். உலக வங்கியும், ஐ.நா.வும் தனது அறிக்கையில் இதனை சொல்லி இருக்கிறது.
    காரைக்குடி :

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பது போலாகும். இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொரோனா காலத்தில் மத்திய அரசின் அலட்சியத்தால் பண பரிமாற்றம் செய்யாததால் வருமானம் இழப்பு, வேலை இழப்பு, வேலை குறைப்பு மற்றும், சுய வேலைவாய்ப்புகள் அறவே நின்று போனதாலும், வர்த்தக நிறுவனங்கள் அடைப்பாலும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பிரதமர் மோடி

    நடுத்தர வர்க்கத்தில் மேலடுக்கு, கீழடுக்கு என இரண்டு உண்டு. நான் கீழ் அடுக்கில் உள்ள 404 பேரை ஆய்வு செய்து ஆய்வின் அறிக்கையினை ஊடகங்களுக்கும் தந்திருக்கிறேன். கீழடுக்கு நடுத்தர வர்க்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தப்பட்டனர். உலக வங்கியும், ஐ.நா.வும் தனது அறிக்கையில் இதனை சொல்லி இருக்கிறது. இன்றைய ஆய்வில் கூறுவது 21 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுவிட்டனர். இதற்கு காரணம் பிரதமர் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×