என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
கூடலூர், பந்தலூரில் அதிகரிக்கும் தொற்று- நீலகிரி மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 587 பேருக்கு தொற்று பதிவாகி இருந்தது. நேற்று இந்த எண்ணிக்கையில் 4 குறைந்து 583 ஆக பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19,661 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15,613 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது 3,954 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியை விட கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மருத்துவ தேவைகளுக்காக அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் அங்குள்ளவர்கள் பல காரணங்களை கூறி கொண்டு இங்கு வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக அங்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கேரளாவை ஒட்டிய எல்லைகளான நாடுகாணி, சேரம்பாடி, நம்பியார் குன்னு, பாட்டவயல் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான கக்கநல்லா பகுதிகளிலும் சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வழியாக வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பதிவு பெற்றிருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் அவர்கள் என்ன காரணத்திற்காக மாவட்டத்திற்கு வருகிறார்கள். அந்த காரணம் உண்மை தானா? என்பதை தீவிர விசாரிக்கின்றனர். அதன் பின்னரே மாவட்டத்திற்குள் செல்ல அனுமதி கொடுக்கின்றனர். இ-பதிவு மற்றும் முறையான காரணங்கள் இல்லையென்றால் திருப்பி அனுப்புகின்றனர்.
எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை கூடலூர் ஆர்.டி.ஓ.ராஜ்குமார், பந்தலூர் டி.எஸ்.பி அமீர் அகமது மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story