search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைபெரியாறு அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர்

    4 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைபெரியாறு அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் நிலங்களில் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதுதவிர பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த சில வருடங்களாக அணையில் ஜூன் மாதத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 4 வருடமாக இதேநிலை நீடித்த வந்த நிலையில் கடந்த வருடம் ஜூன்மாதம் 23-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது கோடை மழை கைகொடுத்துள்ளதாலும், தென்மேற்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும், முல்லைபெரியாறு அணை நீரினை பயன்படுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தற்போது அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டியுள்ளதால் முதல்போக பாசனத்திற்கு ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கவேண்டும் என அரசுக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் முதல்போக நெல்சாகுபடி பணிகளை தொடங்க தயாராகி வருகின்றனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 129.70 அடியாக உள்ளது. வரத்து 405 கனஅடி, திறப்பு 900 கனஅடி, இருப்பு 4633 மி.கனஅடி.

    வைகை அணை நீர்மட்டம் 64.83 அடி, வரத்து 968 கனஅடி, திறப்பு 72 கனஅடி, இருப்பு 4593 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.30 அடி, வரத்து 151 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 126.60 அடி, வரத்து 155 கனஅடி, அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் 3 கனஅடி நீர் ‌ஷட்டர் வழியாகவும், 152 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடி.

    Next Story
    ×