என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவுளிகடைக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.
    X
    ஜவுளிகடைக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

    சிவகிரியில் அரசு விதிமுறைகளை மீறிய ஜவுளிக்கடைக்கு ‘சீல்’

    மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பழைய காவல் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டபோது அங்கு ஒரு ஜவுளிக்கடை திறந்திருந்தது. மேலும் விற்பனையும் நடைபெற்று வந்தது.
    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி மண்டல துணை தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் அரசப்பன் மற்றும் போலீசார் இணைந்து அங்குள்ள முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பழைய காவல் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டபோது அங்கு ஒரு ஜவுளிக்கடை திறந்திருந்தது. மேலும் விற்பனையும் நடைபெற்று வந்தது.

    அங்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கடையின் உரிமையாளர் விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புதூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பதும், அரசு விதிகளை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

    Next Story
    ×