என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புப்படம்
திருமணமான 9 மாதத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை
By
மாலை மலர்15 May 2021 5:53 PM GMT (Updated: 15 May 2021 5:53 PM GMT)

திண்டிவனத்தில் திருமணமான 9 மாதத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம்:
திண்டிவனத்தில் திருமணமான 9 மாதத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் கூறியுள்ளார்.
திண்டிவனம் நல்லியகோடான் நகர் வைத்தியலிங்கம் தெருவை சேர்ந்தவர் வேலு. ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் செந்தில்முருகன்(வயது 31). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், வானூர் தாலுகா உப்புவேலூர் அடுத்த புதுக்குப்பம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த சின்னராசு மகளும், எம்.ஏ. பட்டதாரியுமான விஜயலட்சுமி(30) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி தனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் இவர் மீது செந்தில்முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, இருவருக்கும் தகராறு நடந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் மற்றும் உறவினர்களிடம் செல்போனில் பேசக்கூடாது என்று செந்தில்முருகன் கூறி விஜயலட்சுமியை கண்டித்தார். இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி, வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்முருகன் குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சின்னராசு திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், செந்தில்முருகன், வேலு, செந்தில்முருகனின் தாய் வேல்விழி ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறும் கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 9 மாதத்தில் பட்டதாரி பெண் இறந்ததால், இது தொடர்பாக திண்டிவனம் சப்-கலெக்டர் அனுவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story
×