என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கோவை வழியாக இயக்கப்பட்ட மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ரத்து

கோவை:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரெயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பெரும்பாலான ரெயில்கள் மே 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் இருந்தும் கோவை வழியாகவும் இயக்கப்பட்டு வந்த 8 ரெயில்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கோவை வழியாக இயக்கப்படும் மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதால் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வழியாக ஆலப்புழா செல்லும் தினசரி சிறப்பு ரெயில் (எண் 02639) மற்றும் ஆலப்புழாவில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் தினசரி சிறப்பு ரெயிலும் (எண் 02640), ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல காரைக்காலில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் தினசரி சிறப்பு ரெயில் (எண்06187), மற்றும் எணாகுளத்தில் இருந்து கோவை வழியாக காரைக்கால் செல்லும் தினசரி சிறப்பு ரெயில் (எண் 06188) ஆகியவை இன்று முதல் ஜூன் 1 -ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.