search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு

    கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆணையாளர்(பொறுப்பு) பாலமுருகன், சுகாதார அதிகாரி டாக்டர் ரகுகந்தன் ஆகியோர் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் பெற ஆங்காங்கே கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த அறையை ஆணையாளர்(பொறுப்பு) பாலமுருகன், சுகாதார அதிகாரி டாக்டர் ரகுகந்தன் ஆகியோர் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    நகராட்சி பகுதியில் பரவும் கொரோனா விவரம், ஆம்புலன்ஸ், மருந்து-மாத்திரைகள் போன்ற தேவைகளுக்கு 0423-2230201 என்ற தொலைபேசி எண்ணுக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×