என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

    விருத்தாசலம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் அனைத்து கடைகளும் மதியம் 12 மணிவரை மட்டும் இயங்க கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தற்போது கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் பணி செய்வார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறைச்சாலை உள்ளது. அங்கு சிறைக்கைதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே விருத்தாசலம் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது தற்போது விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் மூலம் தாலுகா அலுவலகத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி நகராட்சி ஊழியர்கள் மூலம் நடைபெற்றது.

    Next Story
    ×