search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஜிபி திரிபாதி
    X
    டிஜிபி திரிபாதி

    முழு ஊரடங்கை மீறினால் நடவடிக்கை: டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

    முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30,621 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 297 பேர் இறந்துள்ளனர்.
    கோப்பு படம்
    இந்த நிலையில் முழு ஊரடங்கை மீறி நாளை இருந்து வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கொரோனா வழிகாட்டுதலை ஒருசிலர் சரியாக பின்பற்றாததால் தொற்று மேலும் பரவ வாய்ப்பு உள்ளது. காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல் மக்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×