search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டு மருந்து கடை
    X
    நாட்டு மருந்து கடை

    முழு ஊரடங்கில் தளர்வு- நாட்டு மருந்து, பழக்கடைகள் திறப்பு

    நாட்டு மருந்து கடைகளையும், பழக்கடைகளையும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
    சென்னை:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக நாட்டு மருந்து கடைகள் மூடப்பட்டன. மேலும் சாலையோர கடைகளும் மூடப்பட்டன. இதனால் சாலையோரம் போடப்பட்டிருந்த பழக்கடைகளும் மூடப்பட்டன.

    கொரோனாவை விரட்ட கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், அதிமதுரம், சுக்கு பொடி உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியூட்டும் மருந்துகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் தான் கிடைக்கும். இதனால் நாட்டு மருந்து கடைகளையும், பழக்கடைகளையும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து அரசு அனுமதி அளித்ததின்பேரில் நாட்டு மருந்து கடைகளும், பழக்கடைகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் மேற்கண்ட கடைகளில் நேற்று மக்கள் ஆர்வத்துடன் வேண்டிய பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக இருமல், சளி, காய்ச்சல் போக்கவல்ல நாட்டு மருந்துகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கியதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×