search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    கொரோனா பரவலில் இருந்து புதுவை மக்களை காப்பாற்றுங்கள்- நாராயணசாமி வேண்டுகோள்

    புதுவையில் ஏராளமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் இருந்தும், ஆக்சிஜன் படுக்கை, வெண்டிலேட்டர்கள், ஐ.சி.யூ. படுக்கை போதிய அளவில் இல்லை.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேசியளவில் உயிரிழப்பு பட்டியலில் புதுவை 3-வது இடம் பெற்றது வெட்கி தலைகுனிய வேண்டிய வி‌ஷயம்.

    புதுவை அரசு விழித்துக்கொண்டு மக்களை காப்பாற்ற வேண்டும். புதுவையில் ஏராளமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் இருந்தும், ஆக்சிஜன் படுக்கை, வெண்டிலேட்டர்கள், ஐ.சி.யூ. படுக்கை போதிய அளவில் இல்லை.

    கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் 16 வெண்டிலேட்டர்களே உள்ளன. புதுவை மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்தாலும் மக்கள் சகஜமாக நடமாடுகின்றனர்.

    முதலமைச்சர் ரங்கசாமி

    போலீசார், வருவாய்த்துறை இணைந்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும். முதல்-அமைச்சர் ரங்கசாமி நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    கொரோனா தடுப்பு பணியில் கவர்னர், தலைமை செயலர், கலெக்டர், மருத்துவம், போலீஸ், வருவாய்த்துறைகள் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் தற்போது களப்பணியில் யாரும் இல்லை. தனிமைப்படுத்தப்பட்டவர்களை டாக்டர்கள், செவிலியர்கள் பார்ப்பது கிடையாது. நோயாளிகள் வெளியில் சுற்றுவதையும் கண்காணிப்பது கிடையாது. இந்த பணிகளை முடுக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் புதுவை சுடுகாடாக மாறிவிடும்.

    தற்போதைய நிலையில் வெண்டிலேட்டர்களை விட ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். சிறிய மாநிலமான புதுவையில் ஒரு நாளில் 30 பேர் இறப்பது அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×