என் மலர்
செய்திகள்

முககவசம்
ஏற்காடு, கெங்கவல்லியில் முககவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்
ஏற்காடு, கெங்கவல்லியில் முககவசம் அணியாத 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காடு டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என தாசில்தார் பொன்னுசாமி மற்றும் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது முககவசம் அணியாத 25 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் முறையாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதேபோல் கெங்கவல்லி பேரூராட்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 15 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். மேலும், கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story