என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அந்தியூர் அருகே கொரோனாவுக்கு மூதாட்டி பலி

    பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஊராட்சி பகுதியில் கடந்த 23-ந் தேதி அன்று நடமாடும் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாம் அமைத்து 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் நேற்று முன்தினம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
    Next Story
    ×