search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    அந்தியூர் வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

    கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருவதால் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள், கடைகள் வைப்போருக்கு அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தை புகழ்பெற்றது. இங்கு அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும்.

    இதன் காரணமாக பவானி, அந்தியூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து சில்லறையாகவும், மொத்தமாகவும் பொருள்களை வங்கிச் செல்வர்.

    தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருவதால் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள், கடைகள் வைப்போருக்கு அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    65 வயதுக்கு மேற்பட்டோர், 12 வயதுக்கு குறைவானவர்கள் வரக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரச் சந்தைக்குள் சென்று வரும் 3 வழித்தடங்களிலும், பொதுமக்கள், கிருமிநாசினி தெளித்துக் கொண்ட பின்னரே செல்ல வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வாரச்சந்தை நடைபெறுவதை முன்னிட்டு அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தலைமையில், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் துப்புறவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் தூய்மைப் பணியாளர்கள் சந்தை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். சந்தை வளாகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வட்டார மருத்துவ அலுவலர் மோகனவள்ளி தலைமையில் மருத்துவர் சக்தி கிருஷ்ணன், வட்டார சுகாதர மேற்பார்வையாளர் பிரகாசன் மற்றும் மருத்துவ குழுவினர் சந்தை வளாகத்தில் முகாமிட்டு காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். இந்த சோதனைக்கு பின்னரே பொதுமக்களை சந்தைக்குள் அனுமதிக்கின்றனர்.

    Next Story
    ×