என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    செங்கம் அருகே கொரோனா பாதித்து வீட்டிலிருந்து வெளியேறிய மூதாட்டி பலி

    செங்கம் அருகே கொரோனா உறுதி செய்யப்பட்ட மூதாட்டி மருத்துவமனைக்கு சென்றால் இறந்துவிடுவோம் என பயந்து கடந்த 23-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.
    செங்கம்:

    செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்றால் இறந்துவிடுவோம் என பயந்து கடந்த 23-ந்தேதி மூதாட்டி வீட்டை விட்டு வெளியேறினார்.

    இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் செவிலியர் குடியிருப்பு அருகே மூதாட்டி நேற்று இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சுகாதார துறையினர் விரைந்து வந்து கடலாடி போலீசார் உதவியுடன், மூதாட்டி பிணத்தை மீட்டு அரசு வழிகாட்டுதலின் படி நல்லடக்கம் செய்ய சொந்த ஊரான புதுப்பாளையத்திற்கு கொண்டு சென்று அவரது மகளிடம் உடலை ஒப்படைத்தனர்.

    மூதாட்டியின் மகன், மருமகள், பேரக்குழந்தை ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.



    Next Story
    ×