என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    போளூர் பகுதியில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா

    போளூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    போளூர்:

    போளூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. போளூர் நகரில் மாலிக் தெரு, அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் தலா 2 பேருக்கும், மாரியம்மன் கோவில் தெரு, கோவிந்தசாமி தெரு ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் போளூர் சுற்றி யுள்ள பால்வார்த்து வென்றான், காங்கேயனூர், வெண்மணி, மாம்பட்டு, பேட்டை, பார்வதிஅகரம் ஆகிய கிராமங்களில் தலா ஒருவருக்கும், கேளூரில் 3 பேருக்கும் என மொத்தத்தில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரையும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இப்பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    Next Story
    ×