search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் 4,086 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்தில் இன்று 14 ஆயிரத்து 842 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் மட்டும் 4,086 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தமிழகத்தில் தற்போது 1,00,668 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 9,142 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 52 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 33
    செங்கல்பட்டு - 1163
    சென்னை - 4086
    கோவை - 1004
    கடலூர் - 205
    தர்மபுரி - 182
    திண்டுக்கல் - 269
    ஈரோடு - 392
    கள்ளக்குறிச்சி - 77
    காஞ்சிபுரம் - 454
    கன்னியாகுமரி - 224
    கரூர் - 119
    கிருஷ்ணகிரி - 319
    மதுரை - 596
    நாகை - 113
    நாமக்கல் - 216
    நீலகிரி - 84
    பெரம்பலூர் - 19
    புதுக்கோட்டை - 93
    ராமநாதபுரம் - 105
    ராணிப்பேட்டை - 248
    சேலம் - 490
    சிவகங்கை - 91
    தென்காசி - 160
    தஞ்சாவூர் - 310
    தேனி - 137
    திருப்பத்தூர் - 110
    திருவள்ளூர் - 793
    திருவண்ணாமலை - 377
    திருவாரூர் - 163
    தூத்துக்குடி - 388
    திருநெல்வேலி - 525
    திருப்பூர் - 316
    திருச்சி - 302
    வேலூர் - 305
    விழுப்புரம் - 205
    விருதுநகர் - 168

    மொத்தம் - 14,842
    Next Story
    ×