என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
டாக்டர் சுதா சேஷய்யன்
வீட்டுக்குள்ளேயும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்- டாக்டர் சுதா சேஷய்யன் யோசனை
By
மாலை மலர்24 April 2021 6:30 AM GMT (Updated: 24 April 2021 6:30 AM GMT)

தினமும் வேலைக்கு சென்று வரும் குடும்ப உறுப்பினர் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளிடம் இருந்து சற்று விலகி இருப்பதன் மூலம் நோய் பரவலை தடுக்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 50 சதவீதம் பேர் குடும்ப உறுப்பினர்கள் மூலம் தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:-

கணவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அடுத்த சில நாட்களில் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்படுவதற்குள் சுமார் 25 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.
அதன்பிறகு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் குடும்ப உறுப்பினர்கள் ஒரே அறைக்குள் பல மணிநேரம் அருகருகே இருப்பதுதான்.
அதேபோல கோடை காலத்தில் மூடப்பட்ட அறைகள், ஏ.சி. சாதனங்களை நீண்ட நேரம் இயக்குவதும் தொற்று பரவலுக்கு வழி வகுக்கிறது. ஜன்னல்களை திறக்காமல் ஏ.சி. அறைக்குள் இருப்பதால் காற்றோட்டம் தடைபடுகிறது. இதுபோன்ற இடங்களில் கொரோனா வைரஸ் காற்றில் நீண்ட நேரம் இருக்கும். இது குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் ஆகிவிடுகிறது.
எனவே ஏசி பயன்பாட்டை தவிர்த்து ஜன்னல்களை திறந்து வைத்தல் மிக அவசியம். அதேபோல தினமும் வேலைக்கு சென்று வரும் குடும்ப உறுப்பினர் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளிடம் இருந்து சற்று விலகி இருப்பதன் மூலம் நோய் பரவலை தடுக்கலாம்.
வேலைக்கு சென்று வருபவர்கள் வீட்டில் தனியாக தூங்குவது நல்லது. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வீடுகளுக்கு உள்ளேயும் குடும்ப உறுப்பினர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சில காலத்துக்கு இது போன்ற கஷ்டங்களை சகித்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இதன் மூலம் கொரோனாவை வெல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவருக்கு எங்கிருந்து தொற்று பரவியது? என்பதை கண்டறிவது கடினமாக இருந்தது. ஆனால் தற்போது குடும்பம், குடும்பமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

கணவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அடுத்த சில நாட்களில் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்படுவதற்குள் சுமார் 25 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.
அதன்பிறகு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் குடும்ப உறுப்பினர்கள் ஒரே அறைக்குள் பல மணிநேரம் அருகருகே இருப்பதுதான்.
அதேபோல கோடை காலத்தில் மூடப்பட்ட அறைகள், ஏ.சி. சாதனங்களை நீண்ட நேரம் இயக்குவதும் தொற்று பரவலுக்கு வழி வகுக்கிறது. ஜன்னல்களை திறக்காமல் ஏ.சி. அறைக்குள் இருப்பதால் காற்றோட்டம் தடைபடுகிறது. இதுபோன்ற இடங்களில் கொரோனா வைரஸ் காற்றில் நீண்ட நேரம் இருக்கும். இது குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் ஆகிவிடுகிறது.
எனவே ஏசி பயன்பாட்டை தவிர்த்து ஜன்னல்களை திறந்து வைத்தல் மிக அவசியம். அதேபோல தினமும் வேலைக்கு சென்று வரும் குடும்ப உறுப்பினர் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளிடம் இருந்து சற்று விலகி இருப்பதன் மூலம் நோய் பரவலை தடுக்கலாம்.
வேலைக்கு சென்று வருபவர்கள் வீட்டில் தனியாக தூங்குவது நல்லது. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வீடுகளுக்கு உள்ளேயும் குடும்ப உறுப்பினர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சில காலத்துக்கு இது போன்ற கஷ்டங்களை சகித்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இதன் மூலம் கொரோனாவை வெல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×