search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கமங்கலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    சங்கமங்கலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    நாகை அருகே 6 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகை அருகே 6 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
    சிக்கல்:

    நாகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கமங்கலம் கிராமத்தில் 9-வது வார்டு பகுதியில் மேலத்தெரு உள்ளது. இதில் தமிழக அரசால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளன.

    தொகுப்பு வீடுகள் பழுதடைந்து உள்ளதால் அதில் வசித்து வருபவர்கள், வீட்டின் பின்புறம் தென்னங்கீற்றால் அமைக்கப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு செல்வம் என்பவரது வீட்டின் பின்புற பகுதியில் உள்ள கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வீசியதால் தீ அருகில் இருந்த பாஸ்கர், கிளியம்மாள், ஞானசுந்தரி, சுப்ரவேல், வளர்மதி ஆகியோரின் வீடுகளுக்கு பரவியது. இதில் 6 வீடுகளும் கொழுந்து விட்டு எரிந்தன.

    தீ விபத்து குறித்து அப்பகுதியினர் கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 6 வீடுகளும் எரிந்து சாம்பலானது.இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த மின் சாதன பொருட்கள், கட்டில், பீரோ, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
    Next Story
    ×