என் மலர்
செய்திகள்

கைது
சத்தியமங்கலத்தில் சிறுமி கடத்தல்- கட்டிட தொழிலாளி கைது
சத்தியமங்கலத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சத்தியமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவர் சத்தியமங்கலம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தைக்கூறி சிதம்பரம் கடத்தி சென்றுவிட்டார்.
இதற்கிடையே அந்த சிறுமியின் பெற்றோர், தங்களுடைய மகளை காணவில்லை என சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிதம்பரம் கடத்தி சென்றுவிட்டதாகவும், பின்னர் அந்த சிறுமியை அவர் பெங்களூரு பகுதியில் விட்டு விட்டு தப்பி சென்றுவிட்டதாகவும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிதம்பரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Next Story






