search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புறப்பட்டு சென்ற மாணவர்கள்
    X
    புறப்பட்டு சென்ற மாணவர்கள்

    புதுவை பல்கலைக்கழகம் 5 நாட்கள் மூடல்- மாணவர்கள் வெளியேற உத்தரவு

    கொரோனா தொற்று அதிகரிப்பால் புதுவை பல்கலைக்கழகம் இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை மூட்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக பதிவாளர் சேகர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதுவை மத்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (23-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை 5 நாட்கள் பல்கலைக்கழகம் மூடப்படும்.

    பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய பணிகளுக்கு இந்த மூடல் பொருந்தாது.

    விடுதிகளில் தங்கி உள்ள பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், மாணவ-மாணவிகள் வருகிற 25-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்.

    விடுதிகள் திறக்கும் தேதி பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும். விடுதிகளில் இருந்து புறப்படும் போது தங்கள் அறைகளில் வைத்துள்ள விலை மதிப்புள்ள சாதனங்கள், லேப்-டாப், செல்போன், கல்வி சான்றுகள் ஆகியவற்றை பத்திரமாக கையோடு எடுத்து செல்வது அவசியம்.

    விடுதிகளில் தங்கி உள்ள மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கும், உள்ளூர் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

    அத்துடன் உணவு விடுதி வருகிற 26-ந் தேதி முதல் மூடப்படும்.

    அதுபோல் விடுதியில் தங்காத இதர பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×