என் மலர்
செய்திகள்

தற்கொலை
ஈரோட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
ஈரோட்டில் மது குடிக்க பணம் இல்லாத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு சூளை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 30). தோல் தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரஞ்சித்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் மது குடிக்க பணம் இல்லாத விரக்தியில் நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரஞ்சித்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
Next Story






