என் மலர்
செய்திகள்

கைது
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மெக்கானிக் கைது
வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி எல்.என். புரத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் சோழராஜன் (வயது 36). தையல் மெஷின் பழுது பார்க்கும் மெக்கானிக்காக உள்ளார். சம்பவத்தன்று இரவு, அந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த சோழராஜன் வீட்டிற்குள் புகுந்து, சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
உடன் சிறுமி கூச்சலிடவே அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். அதற்குள் சோழராஜன் தப்பி ஓடினார். இருப்பினும் கிராம மக்கள் அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து, சோழராஜனை கைது செய்தார்.
Next Story






