என் மலர்

    செய்திகள்

    தொலைபேசி
    X
    தொலைபேசி

    24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம்- கலெக்டர் தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமநாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற ஏதுவாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது.

    இந்த உதவி மையத்தில் சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள் 8 மணி நேர சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த மருத்துவ குழு அலுவலர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் குறித்து கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இந்த உதவி மையத்தை 77087 11334, 77082 92732, 77083 57835, 77089 25833 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×