என் மலர்

  செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  தியாகதுருகம் அருகே மது குடித்த தொழிலாளி மர்ம மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தியாகதுருகம் அருகே மது குடித்த தொழிலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கண்டாச்சிமங்கலம்:

  தியாகதுருகம் அருகே வீ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 40). தொழிலாளியான இவருக்கு செல்வி(35) என்ற மனைவியும், அஜய்குமார்(15) என்ற மகனும், அபிநயா(13) என்ற மகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள சுப்பிரமணி சம்பவத்தன்று தனது வீட்டின் மாடியில் மது குடித்து விட்டு மீதமுள்ள மதுவை அங்கேயே வைத்துவிட்டு வீட்டின் அறைக்குள் வந்தார்.

  பின்னர் மறுநாள் காலையில் மாடிக்கு சென்று மீதமுள்ள மதுவை குடித்த சுப்பிரமணி தனது மகள் அபிநயாவிடம் மதுவில் மண்எண்ணெய் வாடை அடித்தாக கூறிவிட்டு கரும்புவெட்டும் வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு வந்த சுப்பிரமணி திடீரென வாந்தி எடுத்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

  இந்நிலையில் தனது அண்ணன் சாவில் சந்தேகம் உள்ளதாக சுப்பிரமணியின் தங்கை இந்திரா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து சுப்பிரமணி குடித்த மதுவில் விஷம் ஏதேனும் கலந்து இருந்தா? அல்லது அவரது சாவுக்கு வேறுஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×