search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கோவையில் புதிதாக 652 பேருக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

    கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பலரும் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் ஒரு சில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று புதிதாக 652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 645ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் நேற்று ஒரே நாளில் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 615 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

    அதன்படி இதுவரை 61 ஆயிரத்து 500 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    இதுதவிர கோவை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இதனால் கோவையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்தது.

    கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் தற்போது 4,438 பேர் அனு மதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுபோல் கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணியும் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதியில் இருந்து தொடங்கி அதி தீவிரமாக நடந்து வருகிறது. 2-வது அலை வீசத் தொடங்கி உள்ளதால் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக ஆர்வத்துடன் வருகிறார்கள்.

    எனவே பொதுமக்களின் வசதிக்காக கோவை மாநகராட்சி சார்பில் நடமாடும் மொபைல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் அதற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    தற்போது மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 70 டோஸ் தடுப்பூசிகளும், மேற்கு மண்டலத்தில் 250 டோஸ்களும், வடக்கு மண்டலத்தில் 110 டோஸ்களும், தெற்கு மண்டலத்தில் 160 டோஸ்களும் என மொத்தம் 590 டோஸ்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது. இதில் குறிப்பாக மத்திய மண்டலத்தில் ஒரு டோஸ் கூட இல்லை. இதனால் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது:-

    கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பலரும் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் ஒரு சில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து விரைவில் தடுப்பூசி வந்துவிடும். இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும். தடுப்பூசி வந்தவுடன் இந்த தட்டுப்பாடு நீங்கி விடும் என்றனர்.

    Next Story
    ×