search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லையில் ஒரே நாளில் 277 பேருக்கு கொரோனா

    பாளையில் ஒரு மூதாட்டியும், களக்காட்டில் ஒரு இளம்பெண்ணும் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட நிலையில் தற்போது இருவரும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

    இந்நிலையில் இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட மாதிரிகள் சோதனையில் மொத்தம் 277 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது ஒரு நாள் பாதிப்பில் நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு உச்சமாகும். பாதிக்கப்பட்டவர்களில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 227 பேர் ஆவார்கள். மற்றவர்கள் தூத்துக்குடி, தென்காசி உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

    நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரிகிரி இஸ்ரோ மையத்தில் பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 40 ஊழியர்கள் இஸ்ரோ மையத்தில் பாதிக்கப்பட்டனர். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நாளை சிறப்பு முகாம் நடத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் மாநகரில் மட்டும் 147 பேர் அடங்குவர். அம்பையில் 21, மானூரில் 12, பாளையில் 25, வள்ளியூரில் 31, ராதாபுரத்தில் 14, பாப்பாக்குடியில் 10, களக்காட்டில் 9, சேரன் மகாதேவியில் 4, நாங்குநேரியில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தவிர பாளையில் ஒரு மூதாட்டியும், களக்காட்டில் ஒரு இளம்பெண்ணும் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட நிலையில் தற்போது இருவரும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கே.டி.சி. நகர் பகுதியில் ஒரே தெருவில் 6 பேருக்கும், அம்பை பகுதியை சேர்ந்த நர்சு ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வி.எம்.சத்திரத்தில் ஒரே குடியிருப்பில் 5 பேருக்கும், சங்கர் நகரில் 3 ஊழியர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்பட்ட அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போதைய நிலவரப்படி, 1,684 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Next Story
    ×