என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தவளக்குப்பம் அருகே நோய்கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

    சர்க்கரை வியாதி மற்றும் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் மடுகரை சாலை பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது74). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி அன்னக்கிளி இறந்து விட்டதால் அபிமன்னன் தனது மகன் கணேஷ் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அபிமன்னன் சர்க்கரை வியாதி மற்றும் தீராத தலைவலியால் அவதியடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

    இந்தநிலையில் நேற்று காலை மாத்திரை வாங்கி வருவதாக அபிமன்னன் தனது மகன் குடும்பத்தினரிடம் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் உருவையாறு மெயின் ரோட்டில் மாட்டிறைச்சி விற்கும் கடையில் அபிமன்னன் தூக்குபோட்டு பிணமாக தொங்கினார். நோய் கொடுமை காரணமாக அபிமன்னன் இந்த முடிவை தேடிக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மகன் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×