search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் அதிக பாதிப்பு- ஆய்வில் தகவல்

    பார்வையற்றோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க இதழ் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் பார்வையற்றோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க இதழ் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.

    இதனடிப்படையில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையும் கள ஆய்வு செய்தது. ஆய்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணாமலை உடையப்பன் கூறியதாவது:-

    232 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. பார்வையற்றோர், அதிகம், குறைவான பார்வை குறைபாடு உள்ளவர்கள், குறைபாடு இல்லாதவர்கள் என பல பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது.

    பார்வை குறைபாடு கவலை, மனச்சோர்வுடன் தொடர்புடையது. இவ்வாறு உள்ளவர்கள் கொரோனாவால் பெரும் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். அவர்கள் மோசமான விளைவுகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.

    கொரோனா வைரஸ்

    பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று அதிக ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இவர்கள் தாங்களாக சென்று மருத்துவரை அணுகுவதும் குறைவாக உள்ளது.

    பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்கள் வருவாய் ஆதாரமான வேலைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். வீடியோ கான்பரன்சிங், வீடியோ காட்சிகளை காண முடியாதது, கொரோனா பற்றி பிரெய்லியில் பதிவுகள் இல்லாதது பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×