search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணையில் இறங்கி தண்ணீர் குடிக்கும் யானையையும், ஆனந்த குளியல் போடும் யானையையும் படத்தில் காணலாம்.
    X
    அணையில் இறங்கி தண்ணீர் குடிக்கும் யானையையும், ஆனந்த குளியல் போடும் யானையையும் படத்தில் காணலாம்.

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் குளித்து கும்மாளமிடும் யானைகள்

    வரட்டுப்பள்ளம் அணையில் யானைகள் இறங்கி துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி தாகம் தீர குடிக்கின்றன. பின்னர் தண்ணீரை ஒன்றன்மீது ஒன்று துதிக்கையால் உறிஞ்சி பீய்ச்சியடித்து அணையில் குளித்து கும்மாளமிடுகின்றன.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், சிறுத்தை, காட்டெருமை, முள்ளம்பன்றி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானை மற்றும் மான்கள் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் கூட்டம் கூட்டமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. இதுபார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    யானைகள் அணையில் இறங்கி துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி தாகம் தீர குடிக்கின்றன. பின்னர் தண்ணீரை ஒன்றன்மீது ஒன்று துதிக்கையால் உறிஞ்சி பீய்ச்சியடித்து அணையில் குளித்து கும்மாளமிடுகின்றன. சிறிதுநேரம் ஆனந்தக்குளியல் போடும் யானைகள் அணையில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன.
    Next Story
    ×