என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  ஈரோட்டில் தச்சு தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோட்டில் தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  ஈரோடு:

  ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). தச்சு தொழிலாளி. திருமணம் ஆகாதவர். ராஜ்குமாருக்கு கடந்த மாதம் ஒட்டுகுடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜ்குமாருக்கு வயிற்று வலி அதிகமாக இருந்தது. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×