என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சிவகங்கை அருகே மதுவிற்றவர் மீது வழக்கு
சிவகங்கை அருகே மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபானக் கடத்தல்களை தடுக்கும் பொருட்டு டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லறை விற்பனை) கா.வேலுமணி தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். இந்நிலையில். மானாமதுரை தாலுகா கீழ்கரை ஆற்றுப்பாலம் அருகில் மதுபானங்கள் வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
இதில் சட்டவிரோதமாக மதுவிற்ற முருகேசன் என்பவரிடமிருந்து ரூ.1,680 மதிப்புள்ள 14 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டிலுடன் அவரை மதுவிலக்கு ேபாலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story






