என் மலர்
செய்திகள்

விபத்து பலி
ஆவுடையார்கோவில் அருகே சரக்கு ஆட்டோ மோதி கொத்தனார் பலி
ஆவுடையார்கோவில் அருகே சரக்கு ஆட்டோ மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவுடையார்கோவில்:
அறந்தாங்கி அருகே உள்ள மாங்குடி வடக்கு குடியிருப்பை சேர்ந்த குருநாதன் (வயது 33), அறந்தாங்கி அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(52) ஆகிய இருவரும் கொத்தனார்கள். ஆவுடையார்கோவில் பகுதியில் வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் இருவரும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆவுடையார்கோவிலிலிருந்து அறந்தாங்கி சாலையில் துரையரசபுரத்தை அடுத்த செட்டிவயல் அருகே சென்றபோது அறந்தாங்கியில் இருந்து ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த அசாருதீன் என்பவர் ஓட்டிவந்த சரக்கு ஆட்டோ அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குருநாதன் மற்றும் பாலகிருஷ்ணன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குருநாதன் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






