என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

    கீழ்பென்னாத்தூரில் 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் அதேபகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதில் அந்த மாணவி 2 மாத கர்ப்பிணியாகி இருக்கிறார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.
    Next Story
    ×