என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை
    X
    உடைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை

    செங்கம் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு - அ.தி.மு.க.வினர் திரண்டதால் போலீசார் குவிப்பு

    செங்கம் அருகே சிலை உடைக்கப்பட்ட தகவல் பரவியதால் அப்பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் அண்ணாநகர் பகுதியில் சிமெண்டால் செய்யப்பட்ட எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் வலது கையை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலையின் கை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சிலை உடைக்கப்பட்ட தகவல் பரவியதால் அப்பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த செங்கம் டி.எஸ்.பி. சரவணகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Next Story
    ×