என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வாணியம்பாடியில் சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    வாணியம்பாடியில் சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    ஒசூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25) டிரைவர். இவரது நண்பர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிஸி (26). ஒசூரில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். நண்பர்களான இருவரும் நேற்று மாலை சென்னையில் உள்ள மற்றொரு நண்பரை பார்க்க மோட்டார்சைக்கிளில் சென்றனர். சிஸி மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்றார்.

    வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் அருகில் வந்தபோது தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் சிஸி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சதீஷ் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×