என் மலர்

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஓட்டப்பிடாரம் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஓட்டப்பிடாரம் அருகே காதல் தோல்வியில் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். குடும்ப பொறுப்பை தாயார் சாந்தி கவனித்து வந்தார். இளைய மகன் பாபு (24) இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் தன்னுடன் படித்துவந்த பள்ளி தோழியை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க தனது தாயாரிடம் வற்புறுத்தினார்.

    தாயார் மறுத்துவிட்ட நிலையில் வேறொரு நபருடன் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் வெறுப்படைந்த ராணுவவீரர் பாபு நேற்று தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை அறிந்த உறவினர்கள் இதுபற்றி ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×