என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயருகிறது. அதிகபட்சமாக சென்னையில் 180 பேரும், கோவையில் 48 பேரும், செங்கல்பட்டில் 49 பேரும், திருவள்ளூரில் 37 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தருமபுரி, கன்னியாக்குமரி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூரில், திருப்பத்தூரில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரத்து 577 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 483 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 43 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 46 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story